search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கடத்தல்"

    • தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் ரெயில்வே கேட் அருகே காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    சோதனையில் அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி அதனை காரின் மூலம் மதுரை வழியாக வேதாரணியம் கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது.

    இந்த கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த ரவி, கோடியக்காட்டை சேர்ந்த லட்சுமணன், சேத்தாகுடி சேர்ந்த ரவி, வேதமணி, மதுரை சேர்ந்த மாயகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும்.

    • வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • மாணவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், கே.கே. சாலை முத்துராமலிங்கம் தெருவில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கஞ்சா கடத்தி வந்தது மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பால் மாத்யூ மற்றும் திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் அதே கல்லூரியில் படித்து வரும் "சீனியர் மாணவர்" ஒருவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.
    • ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நேற்று இரவு சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர். ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிவந்த டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. கஞ்சா கடத்திலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சா மற்றும் கஞ்சாவை புகைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது.
    • இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்கு தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவை புகைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

    இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே ஜிகி ஹடிட் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது. நன்றாகவே முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

    • வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஞ்சா பொட்டலங்கள் போலீஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.
    • கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது.

    கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். கிண்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்ததாக அஜ்மீர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கஞ்சா பொட்டலங்கள் போலீஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

    இதன்பின்னர் கிண்டி போலீஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் செயல்பட தொடங்கியது. அப்போது அஜ்மீரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

    இதனை கிண்டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே 2 வழக்குகளில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றதால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 3-வதாக கிண்டி போலீஸ் நிலையத்திலும் கஞ்சா பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கண்டித்தார். இதனால் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் கோபத்தில் இருந்த கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவன் சம்பவத்தன்று இரவு பெட்ரோல் குண்டுடன் எதிர்தரப்பு சிறுவனின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் வந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெட்ரோல் குண்டை சாலையோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 6 குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
    • உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரட் ஆகியவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கைதிகளை பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள், உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அப்போது போலீசார் பாதுகாப்புடன் உறவினர்கள் கைதிகளுடன் பேசுவதற்கும், உணவு பண்டங்களை கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது.

    இதேபோல், நேற்று முன்தினமும் கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது யாரோ 2 பேர் ஜெயிலுக்கு உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இந்த தகவலின் பேரில், மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் தண்டனை கைதிகள் சிலரிடம் பார்வையாளர்கள் கொடுத்த உணவு பண்டங்களை வாங்கி சோதனை செய்தார்.

    ஜெயிலில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் சோதனை செய்த போது அவர்களுக்கு கொடுத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

    அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 4 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது இருவரும் போலீசாரை மிரட்டினர். தொடர்ந்து போலீசார் யார் உங்களுக்கு கஞ்சா கொடுத்தது என முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களை பார்க்க வந்த சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்த சேதுராமன், சூர்யபிரகாஷ் ஆகியோர் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், தண்டனை கைதிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்த கொடுத்து சென்ற சேதுராமன், சூர்யபிரகாஷ் மற்றும் கைதிகள் முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    • கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடையிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சாரதாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன், தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
    • வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 14-ந்தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் கஞ்சா பணம் வசூல் செய்ய வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • கடாங்பூர் பகுதியில் இருந்த நமீதா பரீச்சுவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நெடுபுழா பகுதியில் கடந்த மே மாதம் 5-ந்தேதி வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 221 கிலோ கஞ்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    காரில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஒடிசாவில் கஞ்சா விற்பனை கும்பலின் தலைவியாக நமீதா பரீச்சு (வயது 32) என்பவர் செயல்படுவது தெரியவந்தது.

    இவரது கணவர் சாஜன் தாமஸ், கேரளாவை சேர்ந்தவர் ஆவார். அவர் தான் கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்துவதற்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். இவர் கடந்த 14-ந்தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் கஞ்சா பணம் வசூல் செய்ய வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஒடிசா மாநிலம் கஜபதி, கஞ்சம், ராயகடா பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வதாகவும் அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தனிப்படையினர், ஒடிசா விரைந்தனர்.

    அவர்கள், முதலில் கஞ்சா மாபியா கும்பலின் தலைவி நமீதா பரீச்சுவின் உதவியாளர் அருண் என்பவரை, பிரம்மாபூரில் கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடாங்பூர் பகுதியில் இருந்த நமீதா பரீச்சுவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சூர் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சென்னை :

    கே.கே நகர், ராஜமன்னார் சாலை 80அடி சாலை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் கஞ்சா கடத்த வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த பிரவீன், சுந்தர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×